\
சென்னையில் குழந்தை நரபலி?: போலீஸ் தீவிர விசாரணை

சென்னையில் குழந்தை நரபலி?: போலீஸ் தீவிர விசாரணை

சென்னையில் குழந்தை நரபலி?: போலீஸ் தீவிர விசாரணை
Published on

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உயிரிழந்த நிலையில் குழந்தையின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை இளைய தெரு பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரில் பிறந்து சில மணி நேரமேயான குழந்தை ஒன்றின் சடலம் மிதந்திருக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட போது குழந்தையின் சடலம் ஒரு அலுமினிய பாத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் குழந்தை மீட்கப்பட்ட இடத்தில் ஏராளமான பூஜைப் பொருட்களும் கிடந்துள்ளன. இதனால் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. அல்லது குழந்தை எங்கிருந்தாவது கடத்தப்பட்டதா, குழந்தையின் பெற்றோரே நரபலி கொடுத்தனரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com