சென்னை: புத்தாண்டு நள்ளிரவில் கஞ்சா விற்பனை.. 6 பேர் கைது

சென்னை: புத்தாண்டு நள்ளிரவில் கஞ்சா விற்பனை.. 6 பேர் கைது
சென்னை: புத்தாண்டு நள்ளிரவில் கஞ்சா விற்பனை..  6 பேர் கைது

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நள்ளிரவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6பேர் கைது செய்யப்பட்டனர்


சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள அனகாபுத்தூர் நகராட்சிக்கு பின்புறம் உள்ள பூங்கா அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சங்கர் நகர் தனிப்படை போலீசார் சம்பவ இடத்தை கண்காணித்து கஞ்சா விற்பனை நடப்பதை உறுதி செய்தனர்.


பின்னர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஆறு பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் குன்றத்தூரைச் சேர்ந்த சிக்கம் ரவி (28)இ அனகாபுத்தூரைச் சேர்ந்த விஜய் (21)இ சிவகுமார் (32)இ கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த சரவணன் (21)இ மன்சூர்அலி (19)இ கோபி சங்கர் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஆறு பேரிடமும் சங்கர் நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com