car accident
car accidentpt desk

சென்னை: கார் மோதி மூதாட்டி உயிரிழந்த வழக்கு: யூ-டியூபர் இர்ஃபானின் கார் ஓட்டுனர் கைது!

யூ-டியூபர் இர்ஃபானுக்குச் சொந்தமான கார் மோதி, மூதாட்டி உயிரிழந்த வழக்கில் ஓட்டுனர் அசாருதீன் என்பவரை போலீசார் கைது செய்து விஜசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Published on

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் முல்லை நகரைச் சேர்ந்தவர் பத்மாவதி (55). இவர் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று மாலை பத்மாவதி மறைமலை நகரில் உள்ள தனது மகளை பார்த்து விட்டு மீண்டும் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

arrested
arrestedpt desk

அப்போது, மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே சாலையை கடக்கும் போது செங்கல்பட்டில் இருந்து அதிவேகமாக சென்னை நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று மூதாட்டி பத்மாவதி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டி வந்த சிட்டலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அசாருதீன் (34) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அசாருதீன் ஓட்டி வந்த கார் பிரபல யூடியூபர் இர்ஃபானின் கார் என்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார், அசாருதீன் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com