இளைஞர் கைதுpt desk
குற்றம்
சென்னை | காப்பர் கம்பிகளை திருடியதாக இளைஞர் கைது
சைதாப்பேட்டை பகுதியில் குளிரூட்டும் இயந்திரத்தின் காப்பர் கம்பிகளை திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த முபஷ்ஷிர் அலி (50) என்பவர், சைதாப்பேட்டை பகுதியில் வசித்து வரும் அவரது உறவினர் ஜரினா பேகம் என்பவர் வெளிநாட்டிற்குச் சென்று விட்டதால், ஜரினா பேகத்தின் வீட்டை பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 30ம் தேதி அன்று இரவு மேற்படி ஜரினா பேகத்தின் வீட்டின் மொட்டை மாடியிலிருந்த குளிரூட்டும் இயந்திரத்தின் காப்பர் கம்பிகளை யாரோ திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
கைதுகோப்புப்படம்
இது குறித்து முபஷ்ஷிர் அலி சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து கார்த்திகேயன் (19) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து காப்பர் கம்பிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.