குற்றம்
சென்னை: தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் கைது
சென்னை: தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் கைது
சென்னையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கீழ்பாக்கத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், காவல் நிலையத்தில் பணி முடிந்து வீட்டிற்கு தனியாக நடந்து வந்த தனது மனைவியிடம் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவரை கைது செய்தனர்.
தினேஷ்குமாரை விசாரித்தபோது இருசக்கர வாகனத்தில் தான் செல்லும் போது தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை தான் வழக்கமாக கொண்டிருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.