\
சென்னை: போதையில் வாகனங்களை அடித்து நொறுக்கியதாக 2 இளைஞர்கள் கைது

சென்னை: போதையில் வாகனங்களை அடித்து நொறுக்கியதாக 2 இளைஞர்கள் கைது

சென்னை: போதையில் வாகனங்களை அடித்து நொறுக்கியதாக 2 இளைஞர்கள் கைது
Published on

ஓட்டேரி அருகே குடிபோதையில் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பெரம்பூர் ஜமாலியா எஸ்.பி.ஓ காலனி முதல் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தி வைத்திருந்தனர். நேற்று இரவு கத்தியுடன் குடிபோதையில் வந்த 3 பேர் அங்கு நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ, கார், சரக்கு ஆட்டோ, மற்றும் 3 இருசக்கர வாகனங்களின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

இதனை கண்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓடினர். பின்னர் இதுகுறித்து ஓட்டேரி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த ஓட்டேரி போலீசார், கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட பெரம்பூரை சேர்ந்த அர்ஜூன், மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து 2 கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பிடிபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com