காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை தாக்கிய இளைஞர்கள் -நடந்தது என்ன?
காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை வற்புறுத்தி தாக்கியதாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் 18 வயதான பள்ளி மாணவி, சின்னமலையிலுள்ள மாநகராட்சி பள்ளியில் படித்து வருகிறார். இவரை வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த முகேஷ் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாணவி அவருடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முகேஷ் அவரது நண்பருடன் வேளச்சேரி செக்போஸ்ட் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவியை பேச சொல்லியும், காதலிக்குமாறும் வற்புறுத்தியுள்ளனர். ஆனால், மாணவி பேச மறுத்ததால் ஆத்திரமடைந்த முகேஷ் ஹெல்மெட்டால் தாக்கிவிட்டு இருவரும் தப்பிச் சென்றனர்.
பின்னர் பள்ளிக்கும் சென்று தகராறு செய்துள்ளனர். இது குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்ப்பதிவு செய்த கிண்டி காவல்நிலைய போலீசார், வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த முகேஷ்(22), சைதாப்பேட்டையைச் சேர்ந்த சையது மசூத் (23), ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.