Police stationpt desk
குற்றம்
சென்னை: வாகன சோதனையில் சிக்கிய புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது
சென்னை வானகரத்தில் குட்கா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 40 கிலோ குட்கா மற்றும் நச்சு தன்மை வாய்ந்த போதைப் பொருள் பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை வானகரம் போக்குவரத்து காவல் சோதனைச் சாவடி அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனார். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருவர் இருந்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் இருவரும் வானகரம் பகுதியைச் சேர்ந்த ரோஷன் (24), சிஷான் (23) என்பது தெரியவந்தது.
Arrestedpt desk
இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் குட்கா, பான் மசாலா மற்றும் அதிக நெடியுடன் நச்சுத்தன்மை வாய்ந்த போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் இருவருர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.