\
சென்னை: தொடர் வழிபறியில் ஈடுபட்ட 3பேர் கைது... நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல்!

சென்னை: தொடர் வழிபறியில் ஈடுபட்ட 3பேர் கைது... நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல்!

சென்னை: தொடர் வழிபறியில் ஈடுபட்ட 3பேர் கைது... நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல்!
Published on

சென்னை மதுரவாயல் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை மற்றும் மதுரவாயல் பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக செல்பவர்களை குறிவைத்து அவர்களை தாக்கி செல்போன் மற்றும் நகை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து மதுரவாயல் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இதையடுத்து சம்பவம் நடந்த இடங்களில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து அம்பத்தூரை சேர்ந்த மணிகண்டன் (23), யுவராஜ் (20), கார்த்திக் (20), ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். தொடர்ந்து இவர்களிடம் விசாரணை செய்தபோது மதுரவாயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இரவு நேரங்களில் தனியாக செல்பவர்களை கத்தியால் வெட்டியும் இரும்பு பைப்பால் தாக்கியும் செல்போன் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.


இவர்களிடம் இருந்து தங்க நகை மற்றும் ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர்கள் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com