சென்னை: வீட்டில் கஞ்சா பதுக்கல் - வடமாநில இளைஞர்கள் உட்பட 3 பேர் கைது

சென்னை: வீட்டில் கஞ்சா பதுக்கல் - வடமாநில இளைஞர்கள் உட்பட 3 பேர் கைது

சென்னை: வீட்டில் கஞ்சா பதுக்கல் - வடமாநில இளைஞர்கள் உட்பட 3 பேர் கைது
Published on

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வடமாநில இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை திருவான்மியூர் பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக திருவான்மியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உதவி ஆய்வாளர் கோபால் தலைமையிலான போலீசார், அவர்களது வீட்டிற்கு சென்று திரிபுராவை சேர்ந்த கௌதம் தாஸ் (28), ஆகாஷ் தாஸ் (22), ஆகிய இருவரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் கடந்த 30ஆம் தேதி கவுகாத்தி விரைவு ரயிலில் திரிபுராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சதாம் உசேனிடம் (30) என்பவரிடம் ஒப்படைத்தாக தெரிவித்தனர். அதன் பேரில் சதாம் உசேனை கைது செய்த போலீசார், 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com