சென்னை: கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 பேர் கைது

சென்னை: கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 பேர் கைது

சென்னை: கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 பேர் கைது
Published on

மதுரவாயலில் கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரவாயல் அடுத்த வானகரம் சர்வீஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்ற 2 பேரை அந்த வழியாக வந்த மூன்று பேர் கத்தியைக் காட்டி மிரட்டியும் கத்தியால் வெட்டியும் வழிப்பறியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசில் அளித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் காட்டுபாக்கத்தைச் சேர்ந்த ராஜா (28), ரஞ்சித்குமார் (28), குமரேசன் (என்ற) ஆதி (30), ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து கத்தி, மோட்டார்சைக்கிள், ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com