கட்டாய கருக்கலைப்பு - ஆசிரியையின் புகாரில் சின்னத்திரை மேலாளர் மீது வழக்குப் பதிவு

கட்டாய கருக்கலைப்பு - ஆசிரியையின் புகாரில் சின்னத்திரை மேலாளர் மீது வழக்குப் பதிவு

கட்டாய கருக்கலைப்பு - ஆசிரியையின் புகாரில் சின்னத்திரை மேலாளர் மீது வழக்குப் பதிவு
Published on

சென்னை ஆசிரியை கொடுத்த பாலியல் புகாரில் சின்னத்திரை மேலாளர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை பல்லாவரம் வெட்டர்லைன் பகுதியில் வசித்து வருபவர் கலைச்செல்வி (30) இவர், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டின் அருகே தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அத்தொடரின் மேலாளர் ரகு (53) என்பவர் கலைச்செல்வியிடம் சீரியலில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதையடுத்து தனது மனைவி இறந்துவிட்டதாக பொய்யான தகவலை தெரிவித்த ரகு, கலைச்செல்வியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி 4 முறை கட்டாய கருகலைப்பும் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆசிரியரை மனநலம் பாதிக்கபட்டவர் என தவறாக தகவலை பரப்பியும், நடத்தை சரியில்லாதவர் போல் சித்தரித்தும் போலீசாரிடம் கூறி வழக்குப்பதிவு செய்யவிடாமல் சரிகட்டி வந்தார் ரகு.

இந்நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் 417, 376, 492, 323, 506 (1), ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். முதல் தகவல் அறிக்கையில் பாலியல் வன்புணர்வு செய்து, ஏமாற்றியதாகவும், தாக்கி அவரது 2 சவரன் தங்க சங்கிலியை பறித்ததாகவும், சின்னத்திரை மேலாளர் ரகு மற்றும் அவரது உறவினரும் வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் பிரபாகரன் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரகு மற்றும் அவரது உறவினரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com