\
சென்னை: பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை... சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை

சென்னை: பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை... சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை

சென்னை: பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை... சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை
Published on

சென்னையில் பட்டப்பகலில் ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, வெட்டுவாங்கேணி அடுத்த புது கணேஷ் நகர் 5வது தெருவில் ரவுடி ஜெரோம் (34) என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டருகே சரமாறியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.

பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலையால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதையடுத்து ஜெரோம் புதுச்சேரியில் ஒருவரை கொலை செய்ததாகவும் அதன் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

உடலை கைப்பற்றிய நீலாங்கரை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பியோடிய கும்பலை சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிரமாக தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com