தந்தையை கொலை செய்த மகன் கைது
தந்தையை கொலை செய்த மகன் கைதுpt desk

சென்னை | "அப்பாவை கொன்று விட்டேன்" - வீடியோ எடுத்து மாமாவுக்கு அனுப்பிய மகன் - அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகன், அதை வீடியோ எடுத்து மாமாவுக்கு அனுப்பியதால் போலீசில் சிக்கிய மகன் கைது
Published on

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் சங்கலா (42). இவர், சென்னை ஏழு கிணறு வைத்திய நாதன் தெருவில் தங்கி பிரபல தனியார் மிட்டாய் கடைக்கு இனிப்புகள் தயாரித்துக் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருடன் கடந்த இரண்டு மாதங்களாக இவரது மகன் ரோகித் (18) தங்கி, தந்தைக்கு உதவியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு பணி முடிந்ததும் தந்தை மகன் இருவரும் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

மகன் கைது
மகன் கைதுpt desk

இன்று அதிகாலை மகன் ரோகித் தனது தந்தை ஜெகதீஷ் சங்கலாவை இரும்பு ராடல் அடித்துக் கொலை செய்து விட்டு அதனை வீடியோ எடுத்து தனது மாமா மங்கா ராம் என்பவருக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும், அவருக்கு போன் செய்து "நான் விமான நிலையம் செல்கிறேன்.. என்னை தேடவேண்டாம்" என்று சென்னதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வீடியோவை பார்த்து அதிர்ந்து போன மங்கா ராம் சம்பவயிடத்திற்கு ஓடிவந்து பார்த்துள்ளார். அப்போது ஜெகதீஷ் சடலமாக கிடந்துள்ளார்.

தந்தையை கொலை செய்த மகன் கைது
நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு - பின்னணி என்ன?

உடனை மங்கா ராம் இது குறித்து ஏழு கிணறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த போலீசார், ஜெகதீஷ் சங்கலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலை செய்த பிறகு அனுப்பிய வீடியோவை கைப்பற்றி விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

Arrest
Arrestfile

அப்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த ரோகித்தை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், தந்தை ஜெகதீஷ் சங்கலா, விடுமுறை காலங்களில் வீட்டிற்குச் சென்று குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததுடன் மனைவியை அடித்து கொடுமைபடுத்தி வந்தததாக தெரிவித்துள்ளார். இதனால், தந்தை மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

தந்தையை கொலை செய்த மகன் கைது
சென்னை | CRPF வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை - போலீசார் விசாரணை

இந்தநிலையில், நேற்று தந்தை - மகன் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த ரோகித், இரும்பு ராடல் தந்தை அடித்துக் கொலை செய்து விட்டு அதனை வீடியோ எடுத்து மாமாவுக்கு அனுப்பிவிட்டு ஊருக்கு செல்ல ரயில் நிலையத்தில் காத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ஏழுக்கிணறு போலீசார் ரோகித்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com