சென்னை: ரூ. 4.90 கோடி போலி காசோலை மோசடி - தலைமறைவாக இருந்த 5 பேர் கைது

சென்னை: ரூ. 4.90 கோடி போலி காசோலை மோசடி - தலைமறைவாக இருந்த 5 பேர் கைது
சென்னை: ரூ. 4.90 கோடி போலி காசோலை மோசடி - தலைமறைவாக இருந்த 5 பேர் கைது

தனியார் நிறுவனத்தின் பெயரில் ரூ.4.90 கோடி காசோலையை போலியாக தயாரித்து வங்கியில் மாற்ற முயன்ற வழக்கில் 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா குமார். தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு 4.90 கோடி மதிப்பில் போலியான காசோலையை தயாரித்து அதை சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் வங்கியின் கிளையில் கொடுத்து தனது நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணமாக மாற்றி அனுப்ப கூறியுள்ளார்.

இதையடுத்து தொகை பெரியதாக இருந்ததால் காசோலையை ஆய்வுக்குட்படுத்திய வங்கி அதிகாரிகள், காசோலை போலியானது என கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து ராஜா குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வங்கியின் மூத்த மேலாளர் கல்யாண் கிருஷ்ணன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அந்த புகார் சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ராஜா குமார் தனது கூட்டாளிகளான கலைமாறன், லியோ லாரன்ஸ் உள்ளிட்டோருடன் இணைந்து தனியார் வங்கியில் போலியான காசோலையை பயன்படுத்தி பண மோசடி செய்ய முற்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ராஜா குமார் உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ராஜா குமாரின் செல்போன் எண்ணை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா வடுகபட்டி கிராமத்தில் ராஜா குமார் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது

இதையடுத்து தேனிக்குச் சென்ற தனிப்படை போலீசார் அங்கு தலைமறைவாக இருந்த ராஜா குமாரை கைது செய்து சென்னை அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அவர் அளித்த தகவலின் அடிப்படையில் சென்னையில் தலைமறைவாக இருந்த அவரின் கூட்டாளிகள் கலைமாறன், லியோ லாரன்ஸ், அந்தோணி சேசுராஜ், திருமலை ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இவ்விவகாரத்தில் இன்னும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவர்களையும் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com