4 பேர் கைது
4 பேர் கைது pt desk

சென்னை: தொழிலதிபரிடம் ரூ1.5 கோடி ஆன்லைன் மோசடி – 4 பேர் கைது

தொழிலதிபரிடம் சுமார் ரூ1.5 கோடி ஆன்லைன் மோசடி செய்த நான்கு நபர்களை மாநில சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
Published on

தொழிலதிபரிடம் சுமார் ரூ1.5 கோடி ஆன்லைன் மோசடி செய்ததற்காக சென்னையில் ஓட்டுநராக பணிபுரியும் முகமது இஸ்மாயில், திருப்பூரில் மறு சுழற்சி செய்யப்பட்ட ஆடைகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வரும் அபுதாஹிர், கேசவராஜ், கலீல் அகமது ஆகிய நான்கு பேரை மாநில சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

Fraud
FraudPT Desk

மோதிலால் ஓஸ்வால் (Motilal Oswal) மற்றும் எஸ்.பி.ஐ செக்யூரிட்டீஸ் (SBI Securities) பெயரில் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கும் நிறுவனங்கள் பெயரில் யூ-டியூப் ரீல்சை பார்த்து தொழிலதிபர், அதில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது மோசடி அரங்கேறி உள்ளது.

4 பேர் கைது
கள்ளக்குறிச்சி சாராய வழக்கு | சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

கலீல் அகமது மோசடிக்கு முக்கிய ஏஜென்டாக இருந்ததும், இந்தியாவில் இருந்து கம்போடியா சென்று கம்போடியாவில் உள்ள மோசடி நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்து கொண்டே, மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. கேசவராஜ் போலி நிறுவனம் மற்றும் வங்கிக் கணக்குகளைத் திறக்க உதவியுள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட நபர்களின் பின்னணி குறித்து மாநில சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com