சென்னை: வீடு புகுந்து ரவுடி வெட்டிக் கொலை: 9 பேர் கைது
சென்னை மடிப்பாக்கத்தில் ரவுடியை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சபாபதி நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் தொடர் குற்றவாளியாக இருந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளிவந்திருந்தார். இந்நிலையில் ஒரு வழக்கு தொடர்பாக ஆலந்தூர் நீதிமன்றம் சென்று விட்டு வீடு திரும்பிய அவரை, 5 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சரமாரியாக வெட்டியது.
ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமச்சந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தடுக்க முயன்ற ராமச்சந்திரனின் தாயார் சுந்தரி கையில் வெட்டுக்காயங்களுடன் தப்பினார். ராமச்சந்திரனுக்கும், பழவந்தாங்கலைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்த நிலையில், அவர்தான் கொலைக்கு காரணமா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.