\
சென்னை: ஓடும் ரயிலில் பெண்ணிடம் 11.5 சவரன் நகை பறிப்பு

சென்னை: ஓடும் ரயிலில் பெண்ணிடம் 11.5 சவரன் நகை பறிப்பு

சென்னை: ஓடும் ரயிலில் பெண்ணிடம் 11.5 சவரன் நகை பறிப்பு
Published on

சென்னையில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் பதினொன்றரை சவரன் நகைகளை பறித்து விட்டு தப்பிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜெயலட்சுமி என்ற பெண்மணி மூன்று குழந்தைகளுடன் திருவொற்றியூர் பகுதியில் இருந்து மின்சார ரயில் மூலமாக திருமண நிகழ்ச்சிக்காக கிளம்பியுள்ளார். ரயிலானது திருவொற்றியூர் ரயில் நிலைய நடைமேடையை கடந்ததும் திடீரென ரயிலுக்குள் ஏறிய இருவர் விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்துக்கொண்டு ரயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடினர்.

இதையடுத்து விஜயலட்சுமி கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் ராஜாஜி நகர் நேரு தெருவைச் சேர்ந்த கிளி என்கிற தினேஷ் மற்றும் மண்டை என்கிற தினேஷ் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com