கொலையில் முடிந்த எக்ஸ்ட்ரா சாம்பார் தகராறு - தந்தை, மகன் தாக்கியதில் உணவக மேற்பார்வையாளர் உயிரிழப்பு

பல்லாவரம் அருகே உணவக மேற்பார்வையாளரை, பார்சல் வாங்க வந்த தந்தை, மகன் தாக்கியதில் மேற்பார்வையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை மகனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tragedy
Tragedypt desk

செய்தியாளா: சாந்தகுமார்

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் மெயின் ரோட்டில் இயங்கி வரும் பிரபல உணவகத்தில் மேற்பார்வையாளராக அருண் (30), என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இந்த உணவகத்திற்கு அனகாபுத்தூரை சேர்ந்த தந்த சங்கர் (55) என்பவரும், மகன் அருண் குமார் (30) என்பவரும் பார்சல் வாங்க வந்துள்ளனர்.

A2B
A2Bpt desk

இந்நிலையில், உணவு பார்சல் வாங்கிய பிறகு கூடுதலாக சாம்பார் கேட்டதாகக் கூறப்படுகிறது. கூடுதல் சாம்பார் தர உணவக ஊழியர் மறுத்ததால் தகராறு ஏற்பட்டு காவலாளி மதன்குமார் என்பவரை தாக்கியுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட சூப்பர்வைசர் அருணை தாக்கியதில் அவர் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்த சங்கர் நகர் காவல்துறையினர் தந்தை மற்றும் மகனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com