\
சென்னை: மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய பேராசிரியர் கைது

சென்னை: மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய பேராசிரியர் கைது

சென்னை: மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய பேராசிரியர் கைது
Published on

சென்னையில் மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக தனியார் கல்லூரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் கைதுசெய்யப்பட்டார்.

சென்னை கோயம்பேட்டில் இயங்கிவரும் தனியார் கல்லூரி ஒன்றில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய பேராசிரியரை கைது செய்யக்கோரி நேற்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து மாணவிகள் இன்றும் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்திய நிலையில், தனியார் கல்லூரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர்மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com