கோயம்பேடு மேம்பாலத்தில் 'வீலிங்' சாகசம் - இளைஞரை வசமாக பிடித்த போலீஸ்

கோயம்பேடு மேம்பாலத்தில் 'வீலிங்' சாகசம் - இளைஞரை வசமாக பிடித்த போலீஸ்

கோயம்பேடு மேம்பாலத்தில் 'வீலிங்' சாகசம் - இளைஞரை வசமாக பிடித்த போலீஸ்
Published on

சென்னை - கோயம்பேடு மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் சாகசங்களோ பந்தயங்களோ நடத்துவோர் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை காவல்துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது. இந்நிலையில், கோயம்பேடு 100 அடி சாலை நெசப்பாக்கம் புதிய மேம்பாலத்தில் ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் சாசகம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

இதுகுறித்து கண்காணப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போக்குவரத்து புலனாய்வு பிரிவினர், வாகனத்தின் பதிவெண்ணைக் கொண்டு பூவிருந்தவல்லியைச் சேர்ந்த ஆஷிக் உசேனை கைது செய்தனர். அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், சென்னையின் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சாகசங்கள் செய்து, அந்தக் காட்சிகளை 'லைக்குகளுக்காக' சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து அவர் பதிவேற்றிய வீடியோக்களை நீக்கிய காவல் துறையினர், ஆஷிக் உசேனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க: ’ஃபேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணை நம்பி ரூ.25 லட்சத்தை ஏமாந்தேன்’ - தொழிலதிபர் புகார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com