\
சென்னை: திருமண ஆசைகாட்டி +1 மாணவியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் போக்சோவில் கைது

சென்னை: திருமண ஆசைகாட்டி +1 மாணவியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் போக்சோவில் கைது

சென்னை: திருமண ஆசைகாட்டி +1 மாணவியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் போக்சோவில் கைது
Published on

ஆவடி அருகே திருமண ஆசைகாட்டி, +1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய பெயிண்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ஆவடியை அடுத்துள்ள திருநின்றவூர், பெரியார் நகர், கங்கை தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (22). பெயிண்டர் வேலை செய்துவரும் இவர், இதே பகுதியை சேர்ந்த +1 படிக்கும் 17வயது மாணவியிடம் பழகி வந்துள்ளார். பின்னர், அவருக்கு திருமண ஆசைகாட்டிய வாசுதேவன் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனையடுத்து, மாணவி சமீபத்தில் கர்ப்பமானார். இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் நேற்று ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் மாணவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, வாசுதேவன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வாசுதேவனை இன்று காலை கைது செய்தனர். பின்னர், போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com