\
சென்னை: பிரபல ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தோழி உட்பட 9 பேர் கைது

சென்னை: பிரபல ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தோழி உட்பட 9 பேர் கைது

சென்னை: பிரபல ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தோழி உட்பட 9 பேர் கைது
Published on

முன் விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டிக் கொல்லபட்ட வழக்கில் ரவுடியின் பெண் தோழி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர், 3 வது தெருவில் வசிக்கும் பெண் தோழி லோகேஸ்வரி (27), என்பவரை சந்திப்பதற்காக, நேற்று முன் தினம் மாலை பிரபல ரவுடி நாகூர் மீரான் என்பவர் சென்றுள்ளார். அப்போது அந்த பெண் கொடுத்த தகவலின் பேரில் மற்றொரு ரவுடியான ராபின் தலைமையில் 8 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து நாகூர் மீரானை சரமாறியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியது.

இதில், நாகூர் மீரான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்து அங்கு சென்ற ஆதம்பாக்கம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ரவுடி ராபின் (27), பவுல்ராஜ் (22), சீனு (எ) சீனிவாசன் (39), சாமுவேல் (22), காணிக்கைராஜ் (23), விமல்ராஜ் (23), இருளகார்த்திக் (26), பிரபாகரன் (23), மற்றும் நாகூர் மீரானை காட்டிக் கொடுத்த அவரது பெண் தோழி லோகேஸ்வரி ஆகிய 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com