முகமது
முகமதுpt desk

சென்னை | பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு துபாய் சென்ற நபர் - 5 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துவட்டு வெளிநாடு தப்பிச் சென்ற நபர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Published on

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த 2012 முதல் 2016 ஆம் ஆண்டு வரை கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்த வந்துள்ளார். அப்போது அங்கு படித்து வந்த கடலூர் மாவட்டம், லால்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது என்ற மாணவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

Arrested
Arrestedpt desk

இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு முகமது, வேலைக்காக துபாய்க்குச் சென்றுள்ளார். இதையடுத்து அவருக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதையறிந்த அந்த இளம் பெண் அவரது தாயாரிடம் கேட்டபோது, ரூ.5 லட்சம் பணம் தர வேண்டும். முஸ்லிம் மதத்திற்கு மாற வேண்டும் எனக் கூறி இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி குர்ஆன் படிக்க நோன்பு இருக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

முகமது
சென்னை | ரகசிய தகவலை அடுத்து அதிரடி சோதனை... 110 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது

இதனால், பாதிக்கப்பட்ட இளம் பெண் கடந்த 2020 ஆம் ஆண்டு வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வடபழனி போலீசார் வழக்குப் பதிவு செய்து முகமதுக்கு எதிராக "லுக் அவுட் நோட்டீஸ்" வழங்கி விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை முகமது துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த முகம்மது (27) என்ற இளைஞரை கைது செய்த வடபழனி போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட பின் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com