‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பாணியில் இணைய மோசடியில் ஈடுபட்ட காதலர்கள் கைது

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பாணியில் இணைய மோசடியில் ஈடுபட்ட காதலர்கள் கைது

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பாணியில் இணைய மோசடியில் ஈடுபட்ட காதலர்கள் கைது

Facebook மற்றும் OLX இணையதளத்தில் குறைந்த விலையில் செல்போன் விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து ஏமாற்றிய நபர் காதலியுடன் கைது செய்யப்பட்டார்.

சென்னை, நந்தனம், ஸ்ரீராம்பேட்டை, 3வது தெருவை சேர்ந்தவர் சுதாகர் (23), இவர் ஃபேஸ்புக்கில் வந்த விளம்பரத்தில் சுமார் 55000 ரூபாய் மதிப்புள்ள One plus என்ற செல்போனை ரூ. 29500-க்கு விற்பனை செய்வதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிலுள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் பணத்தை தன்னுடைய வங்கி கணக்கில் செலுத்தினால் செல்போனை கொரியர் மூலம் பார்சல் அனுப்புவதாக தெரிவித்துள்ளார். அதனை உண்மையென நம்பிய சுதாகர் Pnonepe மூலம் (28.01.2021) அன்று 19,500 ரூபாயும், மறுநாள் (29.01.2021) 10,000 ரூபாய் என இரு தவணைகளாக மொத்தம் 29,500 அனுப்பியுள்ளார்.

ஆனால் விளம்பரம் செய்த நபர் சொன்னபடி செல்போனை கொரியரில் அனுப்பாமல் காலம் தாழ்த்தியதோடு செல்போன் எண்ணையும் பிளாக் செய்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுதாகர், இது குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரை சைதாப்பேட்டை போலீசார் அடையாறு காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவிற்கு அனுப்பியதன் பேரில், குறைந்த விலைக்கு செல்போன் விற்பதாக வந்த விளம்பரத்தை அளித்து, பொதுமக்களை ஏமாற்றிய குரோம்பேட்டையை சேர்ந்த அரவிந்த் (23), மற்றும் பம்மலை சேர்ந்த அவனது காதலி நளினி (21) ஆகிய 2 நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்களிடமிருந்து 29,500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கைது செய்யப்பட்ட அரவிந்த் மற்றும் நளினி ஆகியோர் காதலித்து வந்த நிலையில், இருவரும் சேர்ந்து இணையதளத்தில் Facebook, OLX போன்றவற்றில் குறைந்த விலைக்கு செல்போன்களை விற்பதாக மோசடியான விளம்பரத்தை பதிவு செய்து, பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர். அரவிந்த் இதுபோல பொதுமக்களை ஏமாற்றியது தொடர்பாக, சில மாதங்களுக்கு முன்பு கொடுங்கையூர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு, பிணையில் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மீண்டும் அரவிந்த் அவரது மோசடியை தொடர்ந்தபோது, இவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டதால், காதலி நளினியின் வங்கி கணக்கில் பணம் வரவு வைத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

விசாரணைக்குப் பின்னர் அரவிந்த் மற்றும் நளினி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com