சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
Published on

சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி கடந்த 2017ஆம் ஆண்டு உடன் பயின்ற மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், கடந்த ஆண்டு முன்னாள் ஆராய்ச்சி மாணவர்கள் கிங்சுக் தேப் சர்மா, சுபதீப் பேனர்ஜி உள்பட 8 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாம்: `கஞ்சா பதுக்கலில் ஈடுபடுவோரின் சொத்துக்கள் முடக்கம்’- அதிரடி காட்டும் தென்மண்டல ஐஜி அஸ்ரா!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com