சென்னை: போலி ஆவணம் மூலம் ரூ.2.76 கோடி மோசடி – கணவன் மனைவி கைது

சென்னை: போலி ஆவணம் மூலம் ரூ.2.76 கோடி மோசடி – கணவன் மனைவி கைது
சென்னை: போலி ஆவணம் மூலம் ரூ.2.76 கோடி மோசடி – கணவன் மனைவி கைது

போலி ஆவணம் கொடுத்து ரூ.2.76 கோடி கடன் பெற்று ஏமாற்றிய கணவன் மனைவியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை தி.நகரில் இயங்கி வரும் M/s Indostar Capital Finance Ltd என்ற நிறுவனத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை M/s M.R.Garden Servies (P) Ltd நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்று கூறி ஏ.பி.ரவி, பொன்னம்மாள், மஞ்சு, வெங்கடேசன் மற்றும் பலர் சேர்ந்து தி.நகர் நிதி நிறுவனத்திடம் ரூ.2.76 கோடி கடன் பெற்றனர்.

அதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இடத்தின் ஆவணத்தை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். பின்னர் அந்த ஆவணத்தை சரிபார்த்தபோது அவை போலியானவை என்றும் ஏற்கனவே பத்திரபதிவு துறையினரால் ரத்து செய்த ஆவணம் என்றும் தெரியவந்தது. மேலும் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.2.76 கோடி கடன் பெற்று ஏமாற்றியதாக கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜுவால் உத்தரவிட்டார். காவல் குழுவினர் தலைமறைவாக இருந்த ஏ.பி.ரவி, அவரது மனைவி மஞ்சு ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பிறகு அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய வெங்கடேசன், பொன்னம்மாள் ஆகியோர் வேறொரு வழக்கில் ஏற்கெனவே சிறையில் உள்ளனர். இவர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com