குற்றம்
சிறார் ஆபாச படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் - ஓட்டல் தொழிலாளி கைது
சிறார் ஆபாச படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் - ஓட்டல் தொழிலாளி கைது
நாமக்கல் அருகே சிறார் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த ஓட்டல் தொழிலாளியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள சோழசிராமணி, மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் குருசாமி (35). சென்னையில் உள்ள தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வரும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் தனது சொந்த ஊரான மாராப்பாளையத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள சமூக ஊடகவியல் பிரிவு போலீசார், குருசாமி செல்போன் மூலம் போலி ஃபேஸ்புக் பக்கத்தில் சிறார் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து வருவதாக நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து குருசாமியை தொடர்ந்து கண்காணித்த நாமக்கல் சைபர் கிரைம் போலீசார், அவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.