\
சென்னை: அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்ததாக 5 பேர் கைது

சென்னை: அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்ததாக 5 பேர் கைது

சென்னை: அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்ததாக 5 பேர் கைது
Published on

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் குடியிருப்புகளை அகற்றக் கூடாது என அப்பகுதி மக்கள் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் பெத்தேல் நகரில் அரசுக்கு சொந்தமான இடத்தை 30 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து சட்டவிரோதமாக விற்பனை செய்து உள்ளதாகவும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி சோழிங்கநல்லூர் தாசில்தார் மணிசேகர் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த இராஜேந்திரன் (56), கண்ணியப்பன் (56), சோழன் (47), வெங்கடேசன் (60), ஹரிதாஸ் (57) ஆகியோரை கைது செய்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com