சென்னை: நில மோசடி வழக்கில் மைனா, சாட்டை படங்களின் தயாரிப்பாளர் கைது

மைனா, சாட்டை உள்ளிட்ட பல்வேறு திரைபடங்களின் தயாரிப்பாளரான ஜான் மேக்ஸ் நில மோசடி வழக்கில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
john max
john maxpt desk

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜான் மேக்ஸ். மைனா, சாட்டை உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படகளின் தயாரிப்பாளரான இவர், வேப்பம்பட்டில் உள்ள 1905 சதுரடி கொண்ட நிலத்தை திருவள்ளூரைச் சேர்ந்த மோகனவேல் என்பவருக்கு 9 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு பவர் வழங்கியுள்ளார்.

arrested
arrestedpt desk

இந்த நிலையில், ஓரிரு மாதத்தில் அவர் வழங்கிய பொது அதிகாரத்தை ரத்து செய்துவிட்டு நிலத்தின் பத்திரத்தையும் வாங்கிச் சென்று உள்ளார். இதன் பின்னர் அதே இடத்தை தமிழ் செல்வன் என்ற மற்றொரு நபருக்கு பொது அதிகாரம் வழங்கி ஹைதராபாத்தைச் சேர்ந்த நபருக்கு விற்பனை செய்து உள்ளார். இந்நிலையில், மோகனவேல் அந்த நிலத்தை விற்பனை செய்ய முயன்ற போது, பொது அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து ஜான் மேக்ஸிடம் கேட்டுள்ளார். அவர் பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மோகனவேல் ஆவடி காவல் அணையரகத்தில் உள்ள மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்தார். புகாரை பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விருகம்பாக்கத்தில் பதுங்கி இருந்த ஜான் மேக்ஸை கைது செய்து விசாரானை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com