மகள் கண்முன்னே தந்தை கொலை விவகாரம்: 6 பேர் கைது

மகள் கண்முன்னே தந்தை கொலை விவகாரம்: 6 பேர் கைது

மகள் கண்முன்னே தந்தை கொலை விவகாரம்: 6 பேர் கைது
Published on

சென்னை மேற்கு மாம்பலத்தில் மகள் கண் முன்னே, தந்தை வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கந்தன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நேற்று முன் தினம் தனது மகள் கீர்த்தனாவை கல்லூரியில் விடுவதற்காக அழைத்துச் சென்றுகொண்டிருந்த போது அவரை ஆட்டோவில் வந்த கும்பல் ஒன்று வழிமறித்து சரமாரியாக வெட்டியது. சம்பவ இடத்திலேயே கந்தன் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், தியாகராய நகரைச் சேர்ந்த வினோத், படப்பையைச் சேர்ந்த பாஸ்கர், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், சைதாப்பேட்டை மணிகண்டன்,நோதாஜி, வாலாஜாபாத்தைச் சேர்ந்த சரவணன் ஆகியோரைக் கைது செய்தனர். குமரன் நகர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com