\
ரயிலில் கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்

ரயிலில் கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்

ரயிலில் கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்
Published on

ஹவுரா ரயிலில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 

ஹவுராவில் இருந்து சென்னைக்கு வரும் ரயிலில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போதை தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி வந்த, சென்னையை சேர்ந்த சையது மற்றும் தமீம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 கிலோ போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com