\
சென்னையில் இரட்டைக் கொலை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னையில் இரட்டைக் கொலை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னையில் இரட்டைக் கொலை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த தம்பதியினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கொட்டிவாக்கம், ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர்கள் மாயாண்டி - வள்ளிநாயகி தம்பதியினர். இவர்களது மகன்கள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால் இவர்கள் இருவர் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் எதேச்சையாக சென்று பார்த்தபோது முதியவர்கள் இருவரும் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துரைப்பாக்கம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.  கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். நகை, பணத்திற்காக கொலை நடைபெற்றதா? அல்லது சொத்துதகராறில் கொலை நடைபெற்றதா என்ற கோணத்தில் துரைப்பாக்கம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com