சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சப் இன்ஸ்பெக்டர் மகன் கைது
சென்னையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் மகனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை போலீஸ் குடியிருப்பில் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் அவரது மகன் பிரவீனும் வசித்து வருகின்றனர். 22 வயதான பிரவீன் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில், அதே கட்டிடத்தில் குடியிருக்கும் பக்கத்து வீட்டில் இருக்கும் 12 வயது சிறுமியை செல்போனில் படம் காண்பிப்பதாக கூறி மொட்டை மாடிக்கு அழைத்து சென்றுள்ளார் பிரவீன். அவனை நம்பி உடன் சென்ற சிறுமிக்கு செல்போனில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து காண்பித்துள்ளான். இதைப்பார்த்த சிறுமி அலறிக்கொண்டு கீழே ஓடி வந்து தனது பெற்றோரிடம் கூறினாள்.
இதையடுத்து சப் இன்ஸ்பெக்டரிடம் சிறுமியின் பெற்றோர் பிரவீனின் நடத்தை குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீஸில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் பிரவீன் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சில நாட்களுக்கு முன்பு மாநில குற்ற ஆவணப் பணியகம் அறிக்கை ஒன்று வெளியிட்டது. அதில், கடந்த இரண்டு வருடத்தில் 320 வழக்குகள் போஸ்கோ சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து வழக்குகள் மட்டுமே முடிந்துள்ளது.