சென்னை: ஏடிஎம் மிஷினில் நூதன முறையில் கொள்ளை - ஷாக் ஆன வங்கி அதிகாரிகள்.. நடந்தது என்ன?

சென்னை: ஏடிஎம் மிஷினில் நூதன முறையில் கொள்ளை - ஷாக் ஆன வங்கி அதிகாரிகள்.. நடந்தது என்ன?
சென்னை: ஏடிஎம் மிஷினில் நூதன முறையில் கொள்ளை - ஷாக் ஆன வங்கி அதிகாரிகள்.. நடந்தது என்ன?

வேளச்சேரி மற்றும் தரமணியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணம் காணாமல் போனதாக வங்கி மேலாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை வேளச்சேரி, விஜயநகர் எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம்-மில் கடந்த 18 மற்றும் 19-ம் தேதி டெபாசிட் மிஷின் மற்றும் பணம் எடுக்கும் மிஷினில் 13,50,000 ரூபாய் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 8 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருக்கிறது. காணாமல் போன நான்கு லட்சத்து 98 ஆயிரம் ரூபாயை பணத்தை கண்டுபிடித்து தருமாறு வேளச்சேரி போலீசாரிடம் வங்கி முதன்மை மேலாளர் தெபாசிஸ் பிரியரஞ்சன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் சி.எஸ்.ஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் தரமணி, எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ.வங்கி ஏடிஎம்-மிலும் 3 லட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மாயமாகியுள்ளது. அதிர்ச்சியடைந்த வங்கி நிர்வாகத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்மநபர்கள் ஏடிஎம் மையங்களில் நுழைந்து பணம் போடுவதுபோல் நடித்து, பணத்தை இயந்திரத்தில் வைப்பர்.

இயந்திரம் பணத்தை எடுக்கும்போது சுமார் 20 நொடிகள் பணத்தை விடாமல் பிடித்தவாறே இருக்கும்போது, அவர்களது கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதோடு, இயந்திரத்தின் உள்ளே செல்லாத பணத்தையும் அவர்கள் எடுத்துக் கொள்வர். இதுபோல் சுமார் 10 முறை இந்த ஏடிஎம் இயந்திரத்திலேயே இதுபோல செய்து 1.5 லட்சம் வரை எடுத்துள்ளார்.

இதேபோல் தரமணி, விருகம்பாக்கம், போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம்-களிலும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தள்ளது. இது தொடர்பாக வாங்கி மேலாளர்  தினேஷ் கர்ணா தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தரமணி போலீசார் சி.எஸ்.ஆர். பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com