3 பேர் கைது
3 பேர் கைதுpt desk

சென்னை | மாவட்ட ஆட்சியர் அலுவலக NRI வங்கிக் கணக்கில் நூதன மோசடி - 3 பேர் கைது

சென்னை மாவட்ட ஆட்சியரின் NRI வங்கிக் கணக்கில் இருந்து ரூ.11.63 லட்சம் மோசடி செய்ததாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: ஆனந்தன்

வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் யாரேனும் பணியின் போது உயிரிழந்துவிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் NRI வங்கி கணக்கு செயல்படுகிறது. சென்னை மாவட்ட ஆட்சியரின் வங்கி கணக்கிலிருந்து NRI உதவி தொகை பெறும் பயனாளி போன்று போலி ஆவணங்களை தயாரித்து 11.63 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று முறைக்கேடு நடந்துள்ளதாக துணை ஆட்சியர் ஹர்ஷத் பேகம் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

arrest
arrestPT DESK

இது தொடர்பான விசாரணையில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் NRI உதவித் தொகை பெரும் பயனாளி போன்று, நடிக்க வைத்து, அவர் மூலம் பணத்தை முறைகேடு செய்ததும் அரசு ஊழியர்களான சுப்பிரமணி மற்றும் பிரமோத் ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

3 பேர் கைது
ராணிப்பேட்டை | மின் இணைப்பை மாற்றம் செய்ய லஞ்சம் - உதவி செயற்பொறியாளர் உட்பட 3 பேர் கைது

இதையடுத்து வருவாய் ஆய்வாளர்களாக பணிபுரிந்து வரும் இருவரும் இந்த முறைக்கேட்டிற்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனர் என போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com