\
செயின் பறிப்புக் கொள்ளையனை துரத்தி பிடித்த ஐஏஎஸ் மாணவர்கள்

செயின் பறிப்புக் கொள்ளையனை துரத்தி பிடித்த ஐஏஎஸ் மாணவர்கள்

செயின் பறிப்புக் கொள்ளையனை துரத்தி பிடித்த ஐஏஎஸ் மாணவர்கள்
Published on

சென்னை அண்ணாநகர் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை  ஐஏஎஸ் படிக்கும் மாணவர்கள் துரத்தி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை அண்ணாநகர் பகுதியில் கிருஷ்ணகுமாரி என்பவரின் கழுத்திலிருந்த 10 சவரன் தங்க சங்கிலியை ஒரு நபர் அறுத்துக்கொண்டு சற்று தொலைவில் இருசக்கர வாகனத்தில் தயாராக நின்றிருந்த அவனது கூட்டாளியுடன் தப்பிச் சென்றுவிட்டான். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுக்கவே, அண்ணாநகர் பகுதி காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இதே செயின் பறிப்பு கொள்ளையர்கள் பக்கத்து தெருவில் மற்றொரு சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு தப்பிக்க முற்படும்போது அங்கிருந்த ஐஏஎஸ் அகாடமியில் பயின்று வரும் மாணவர்கள் ஒரு திருடனை மடக்கி பிடிக்க மற்றொருவன் தப்பி சென்றுவிட்டான். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றவாளியை பிடித்து அவனிடமிருந்து 10 சவரன் தாலி சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com