\
சென்னை: ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி - வடமாநில இளைஞர் கைது

சென்னை: ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி - வடமாநில இளைஞர் கைது

சென்னை: ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி - வடமாநில இளைஞர் கைது
Published on

மேடவாக்கத்தில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னை பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கம் சந்திப்பில் தனியார் வங்கி (ஐசிஐசிஐ) ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம்-ல் யாரோ ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதாக வங்கியின் மும்பை தலைமை அலுவலகத்தில் அலாரம் ஒலித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்து சென்னை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அப்போது, ஏ.டி.எம் மெசினை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் (22), என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com