சென்னை: தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக முதியவர் கைது – 13 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனத்தை திருடியதாக 63 வயது முதியவர் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 13 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
Accused
Accusedpt desk

செய்தியாளர்: ஆனந்தன்

சென்னை மடிப்பாக்கம், உள்ளகரம் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் கவிதா. இவர் கடந்த பத்தாம் தேதி சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பறக்கும் ரயில் மூலம் தனது அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதையடுத்து பணி முடிந்து மீண்டும் வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்த அவர், தனது இருசக்கர வாகனத்தை எடுக்க வந்துள்ளார். அப்போது அவரது வாகனம் காணாமல் போனது தெரியவந்தது.

arrest
arrestfreepik

இது தொடர்பாக கவிதா, வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது வயதான நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுதது சிசிடிவி காட்சிகளை வைத்து இருசக்கர வாகனத்தை திருடிய நபர் சென்னை வேளச்சேரி விஜயநகர் பகுதியைச் சேர்ந்த 63 வயதான இளங்கோ என்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவரிடம் இருந்து 13 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com