சென்னை: தலைமறைவு குற்றவாளியை பிடிக்கச் சென்ற போலீசாரை கத்தியால் வெட்ட முயற்சி

சென்னை: தலைமறைவு குற்றவாளியை பிடிக்கச் சென்ற போலீசாரை கத்தியால் வெட்ட முயற்சி

சென்னை: தலைமறைவு குற்றவாளியை பிடிக்கச் சென்ற போலீசாரை கத்தியால் வெட்ட முயற்சி
Published on

தலைமறைவு குற்றவாளி கைது, தனிப்படை போலீசார் பிடிக்கச் சென்றபோது கத்தியால் வெட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த நடராஜன் (எ) பாம்கை நடராஜன் (24), என்பவரை பிடிக்க சென்னை பெரும்பாக்கம் போலீசார், தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

இந்நிலையில் அவரை தேடி,பிடிக்கச் சென்ற தனிப்படை போலீசாரை கண்டதும் கத்தியால் வெட்ட முயன்றுள்ளார். இதையடுத்து அவரை மடக்கி பிடித்த போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் மீது கொலை முயற்சி, கஞ்சா வழக்கு என 26 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இவ்வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் இவருக்கு பிடி ஆணை வழங்கப்பட்டிருந்த நிலையில், போலீசார் அவரை பிடித்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com