\
சென்னை: சிறுமிக்கு தாலிகட்டி குடும்பம் நடத்தியதாக இளைஞர் போக்சோவில் கைது

சென்னை: சிறுமிக்கு தாலிகட்டி குடும்பம் நடத்தியதாக இளைஞர் போக்சோவில் கைது

சென்னை: சிறுமிக்கு தாலிகட்டி குடும்பம் நடத்தியதாக இளைஞர் போக்சோவில் கைது
Published on

சென்னை எண்ணூரில் 17 வயது சிறுமிக்கு தாலிகட்டி குடும்பம் நடத்திய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆண்டனி (19). இவருக்கும் திருவொற்றியூரைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி காதலித்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர்கள் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் காணாமல் போன சிறுமியை ஆண்டனி திருமணம் செய்து குடும்பம் நடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து ஆண்டனியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com