\
மதுக்கடையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற நபர் கைது

மதுக்கடையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற நபர் கைது

மதுக்கடையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற நபர் கைது
Published on: 

மதுக்கடையில் கள்ள நோட்டுகளை மாற்ற  முயன்ற நபர் கைது. 200 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை கிண்டி, மடுவின்கரையில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மார்க் கடையில் மது வாங்க வந்த நபர் ஒருவர் இரண்டு 200 ரூபாய் கள்ளநோட்டுகளை கொடுத்து மது வாங்க முயன்றுள்ளார். அப்போது மதுக்கடை ஊழியர் அந்த நோட்டு இரண்டும் கள்ள நோட்டு என்பதை அறிந்து கிண்டி போலீசாரை வரவழைத்து அவரை பிடித்துக் கொடுத்தார்.

இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் திருவல்லிக்கேணியை சேர்ந்த அஜாஸ் (37), என்பது தெரியவந்தது. அவரை அழைத்துக் கொண்டு கிண்டி போலீசார் மேலும் ஏதேனும் கள்ள நோட்டு இருக்கிறதா என பார்க்க அவரது இல்லத்திற்கு செல்கின்றனர். இவருக்கு கள்ளநோட்டு எப்படி கிடைத்தது எனவும் விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com