\
சென்னை: தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டுவந்த முகமூடி கொள்ளையன் கைது

சென்னை: தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டுவந்த முகமூடி கொள்ளையன் கைது

சென்னை: தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டுவந்த முகமூடி கொள்ளையன் கைது
Published on

தாம்பரம் அருகே தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு போலீசாரிடம் இருந்த தப்பித்துவந்த முகமூடி கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.

சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முடிச்சூர் வெளிவட்ட சாலை சர்வீஸ் ரோட்டில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தது. இதனையடுத்து பீர்க்கன்காரணை போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அந்த மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் செல்ல முயன்ற போது போலீசார் முகமூடி ஆசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் பெருங்களத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் (30), என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பல்வேறு செயின் பறிப்பு சம்பவங்களில் சிக்காமல் தப்பித்துவந்த இவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com