சென்னை: பார் நடத்த லைசென்ஸ் பெற்றுத் தருவதாக ரூ.80 லட்சம் மோசடி: ஒருவர் கைது

சென்னை: பார் நடத்த லைசென்ஸ் பெற்றுத் தருவதாக ரூ.80 லட்சம் மோசடி: ஒருவர் கைது
சென்னை: பார் நடத்த லைசென்ஸ் பெற்றுத் தருவதாக ரூ.80 லட்சம் மோசடி: ஒருவர் கைது

பாருடன் கூடிய ரெஸ்டாரண்ட் தொழில் தொடங்க இடம், லைசன்ஸ் பெற்றுத் தருவதாக 80 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சபரி கணேஷ். இவர் அங்கு ரெஸ்டாரண்ட் நடத்தி வரும் நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னையில் பாருடன் கூடிய ரெஸ்டாரண்ட் ஒன்றை அமைத்து புதிதாக தொழில் நடத்த இடம் தேடிவந்தார். இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள வெலிங்டன் பிளாசாவில் தனியார் நிறுவனம் நடத்தி வந்த சரவணன் என்ற பென்ஸ் சரவணன் (43) சபரி கணேஷ இடம்தேடி அலைவதை அறிந்து அவரை அணுகியுள்ளார்.

அப்போது அவரிடம் சென்னையில் பாருடன் கூடிய ரெஸ்டாரண்ட் தொழில் நடத்துவதற்கு தன்னிடம் தகுந்த இடம் மற்றும லைசன்ஸ் இருப்பதாகவும், இருவரும் இணைந்து கிளைகளை தொடங்கி ஒப்பந்தமிட்டு தொழிலை நீங்கள் விரைவாக துவங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். சரவணன் கூறியதை நம்பிய சபரி கணேஷ் சரவணனின் இடத்தை பார்த்துவிட்டு அவருடன் சேர்ந்து கூட்டாக ஒப்பந்தமிட்டுள்ளார்.

இதையடுத்து சரவணனின் இடத்தில் பாருடன் கூடிய ரெஸ்டாரண்ட் அமைக்க உள்கட்டமைப்பு வசதிகள் செய்வதற்காக 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பல தவணைகளாக 80 லட்சம் ரூபாயை சரவணனின் நிறுவன வங்கிக் கணக்கிற்கு சபரி கணேஷ் அனுப்பியுள்ளார். ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட பின்னரும் சரவனன் தனது இடத்தில் சபரி கணேஷுடன் போட்ட ஒப்பந்தபடி உள்கட்டமைப்பு வசதிகளை அமைக்கும் பணியை செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த சபரி கணேஷ் தான் அளித்த பணத்தை திரும்ப அளிக்கும்படி சரவணனிடம் கேட்டுள்ளார். போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததுடன் தனது அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சபரி கணேஷ் கடந்த 2019 ஆம் ஆண்டு இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி பிரிவு போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் சரவணன் என்ற பென்ஸ் சரவணன், சபரி கணேஷிடம் இருந்து 80 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்து தலைமறைவானது உறுதியானது.

அதனடிப்படையில் தலைமறைவாக இருந்த சரவணனை கடந்த 3 ஆண்டுகளாக போலீசார் தேடிவந்த நிலையில், இன்று சாலி கிராமம் ஆற்காடு சாலையில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com