சென்னை: முன்பகை காரணமாக இளைஞரை கத்தியால் வெட்டிய  கும்பல்: 6 பேர் கைது

சென்னை: முன்பகை காரணமாக இளைஞரை கத்தியால் வெட்டிய கும்பல்: 6 பேர் கைது

சென்னை: முன்பகை காரணமாக இளைஞரை கத்தியால் வெட்டிய கும்பல்: 6 பேர் கைது
Published on

பூந்தமல்லி அருகே இளைஞரை கத்தியால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பில்லா (என்ற) மணிமாறன் (42). சென்னீர்குப்பத்தில் உள்ள பேட்டரி கம்பெனியில் வேலை செய்து வரும் இவரை நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதில், காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பில்லா, பூந்தமல்லி போலீசில் அளித்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து பூந்தமல்லியைச் சேர்ந்த ராஜேஷ் (22), பார்த்திபன் (19), சபரி (20), வசந்த் (20), சங்கர் (21), சந்துரு (20), ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பார்த்திபன், இந்த கம்பெனிக்கு வந்து லாரி டிரைவரிடம் செல்போனை பறித்துச் சென்றதாகவும் அதனை பில்லா மீட்டு வந்து கொடுத்ததால் ஆத்திரமடைந்த பார்த்திபன் தனது நண்பர்களுடன் வந்து பில்லாவை கத்தியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com