சென்னை: மாடி விட்டு மாடி தாவி காப்பர் பைப்களை திருடிய சிறார்கள்.. சிக்கியது எப்படி?

சென்னை: மாடி விட்டு மாடி தாவி காப்பர் பைப்களை திருடிய சிறார்கள்.. சிக்கியது எப்படி?
சென்னை: மாடி விட்டு மாடி தாவி காப்பர் பைப்களை திருடிய சிறார்கள்.. சிக்கியது எப்படி?

கொரட்டூரில் மாடி விட்டு மாடி தாவி திருடும் மர்ம கும்பலை பொறிவைத்து கையும் களவுமாக கொரட்டூர் காவல் துறையினர் பிடித்துள்ளனர்.

சென்னை கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய 18-வது தெருவில் உள்ள ரூபி என்கிளேவ் என்னும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. நேற்றிரவு மாடியின் மேலே வந்த மர்ம நபர்கள் அங்குள்ள 6 வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த ஏசி-யின் காப்பர் பைப்களை மட்டும் குறி வைத்து திருடிச் சென்றதாக 5-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது.

அதேபோல் கொரட்டூர் அக்ரஹாரம், சீனிவாசன் நகர், பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் மாடி வீட்டு மாடி தாவி காப்பர் பைப்புகளை திருடி வருகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்தும் இவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொரட்டுர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வழக்குப் பதிவு செய்து இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர்.

இதையடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்கள் குறித்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில், நேற்றிரவு அதே பகுதிக்கு மீண்டும் காப்பர் பைப்புகளை திருட வந்த கொரட்டூர் தேவர் நகர் பகுதியைச் சேர்ந்த சிறார் குற்றவாளிகளான சிவப்பிரியன் (16), விஷால் (16), தேவராஜ் (16), சதீஷ் (16) ஆகிய நான்கு சிறார்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 25 கிலோ காப்பர் பைப்புகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com