Accused
Accusedpt desk

சென்னை: போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக 4 பேர் கைது

சென்னை துரைப்பாக்கத்தில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
Published on

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் போதை மாத்திரை மற்றும் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்ததாக நான்கு பேரை துரைப்பாக்கம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடமிருந்து 10 போதை மாத்திரை, 6 கிராம் மெத்தபெட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Arrested
Arrestedfile

இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், நண்பர்களிடம் இருந்து வாங்கி விற்பனை செய்ததாக கூறியுள்ளனர். அவர்கள் திருமங்கலத்தைச் சேர்ந்த லோகேஷ் (24), கடலூரைச் சேர்ந்த தெய்வநாதன் (27), நாகர்கோவிலைச் சேர்ந்த ராகேஷ் (24), வேளச்சேரியைச் சேர்ந்த ஆலன் கிரிகேரி (25), என்பதும் தெரியவந்தது.

Accused
உடுமலை: காயங்களுடன் இறந்து கிடந்த காட்டு யானை – வனத்துறையினர் விசாரணை

இந்நிலையில், அவர்கள் நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுக்கு விற்பனை செய்த நபர்களையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com