சென்னை | காவலாளியை கல்லால் தாக்கிவிட்டு இரும்பு பொருட்களை திருடிச் சென்ற 3 பேர் கைது
செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை OMR சாலையில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிக்காக வைத்திருந்த இரும்பு பொருட்களை ஆட்டோவில் திருடிச் செல்வதை தட்டிக் கேட்ட காவலர்களை கல்லால் அடித்துவிட்டு தப்பிச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டனர். சென்னை OMR சாலை கந்தன்சாவடி அருகே நடைபெற்று வரும் மெட்ரோ பணிக்காக வைத்திருந்த இரும்பு பொருட்களை ஆட்டோவில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் பட்டப்பகலில் நேற்று திருடியுள்ளனர்.
அப்போது இதனை பார்த்த பாதுகாவலர்கள் ஆட்டோவில் வந்து இரும்பு பொருட்களை திருடியவர்களை தடுக்க முயன்றுள்ளனர். அப்போது அவர்களை கல்லால் அடித்து துரத்தியுள்ளனர். மெட்ரோ ரயில் பணிக்காக வைத்திருந்த இரும்பு பொருட்களை பட்டப்பகலில் திருடிக் கொண்டு தப்பி ஓடிய ஆட்டோவில் வந்த மூன்று பேர் மீது துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்ட செக்யூரிட்டி சாலமோன் ரிஷிகாந்த சிங் நேற்று புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப் பததிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கண்ணகி நகரைச் சேர்ந்த முத்து (40), மணிகண்டன் (32), சரத்குமார் (35), மூவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து 150 கிலோ இரும்பு பொருட்கள் மற்றும் ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.