சென்னை: புத்தாண்டு அன்று பைக் ரேஸில் ஈடுபட்டதாக மேலும் 2 இளைஞர்கள் கைது

சென்னை: புத்தாண்டு அன்று பைக் ரேஸில் ஈடுபட்டதாக மேலும் 2 இளைஞர்கள் கைது
சென்னை: புத்தாண்டு அன்று பைக் ரேஸில் ஈடுபட்டதாக மேலும் 2 இளைஞர்கள் கைது

புத்தாண்டு தினத்தன்று பைக் ரேஸ் மற்றும் பைக் வீலிங் செயலில் ஈடுபட்ட மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 31 ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்னை காவல்துறையால் தடைவிதித்திருந்த நிலையில், ஈ.சி.ஆர் சாலை, வெட்டுவாங்கனி பகுதியில் பைக் ரேஸ் மற்றும் பைக் வீலிங் செயலில் ஈடுபட்ட இருவர் குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சிசிடிவி காட்சிகள் உதவியோடு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் சோழிங்கநல்லூர் காந்தி தெருவைச் சேர்ந்த தியாகராஜன் (23) மற்றும் ஈஞ்சம்பாக்கம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் (20) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தியாகராஜன் என்ற இளைஞரிடமிருந்து யமஹா இரு சக்கர வாகனத்தையும், முத்துக்குமார் என்ற இளைஞரிடமிருந்து கேடிஎம் டியூக் என்ற இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com