சென்னை: அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து 153 சவரன் நகை கொள்ளை

சென்னை: அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து 153 சவரன் நகை கொள்ளை

சென்னை: அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து 153 சவரன் நகை கொள்ளை
Published on

ஆதம்பாக்கத்தில் அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து, பீரோ லாக்கரில் இருந்த 153 சவரன் தங்க நகைககள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் 40 ஆயிரம் ரூபாயை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

சென்னை ஆதம்பாக்கம், ஜீவன்நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கணேஷ் (59). இவர் பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர், கடந்த 17-ம் தேதி தனது உறவினர்களை சந்திக்க திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலிக்கு குடும்பத்தாருடன் புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், இன்று அவரின் வீட்டுக் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் கணேஷிற்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்து போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது, வீடு முழுவதும் துணிகள் கலைந்து கிடந்தன. படுக்கை அறையில் இருந்த இரண்டு பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து சென்னை திரும்பிய கணேஷ் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கையில், 150 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடுபோயிருக்கலாம் எனவும், முழு விவரம் ஊரில் உள்ள தனது மனைவிக்குத்தான் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல, ஆதம்பாக்கம், ஜீவன்நகர் முதல் தெருவை சேர்ந்தவர் வினோத். அவரது வீட்டின் கதவு பூட்டை உடைத்த கொள்ளையர்கள், பீரோவில் இருந்த மூன்று சவரன் நகைகள், வெள்ளிப் பொருட்களை திருடி சென்றனர். அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கு ஒன்றும் கிடைக்காததால் துணி மணிகளை கலைத்து, பாத்திரங்களை உருட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகள் மூலம் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com